போட்டிக்கு போட்டி மாஸ் காட்டும் தோனி..! தோனி படைத்த மற்றொரு புதிய சாதனை..! – விவரம் உள்ளே

MSdhoni
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள தோனியின் கீப்பிங் திறன் குறித்து நாம் அனைவரும் அறிந்த ஒரு விடயம் தான்.கீப்பிங்கில் [பல்வேறு சாதனைகளை படைத்துள்ள தோனி, நேற்று நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அதிக கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர் பட்டியலில் இடம் பிடித்து மற்றுமொரு சாதனையை படைத்துள்ளார் தோனி.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று (ஜூலை 14) நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்க்ளு 322 ரன்களை எடுத்து.

பின்னர் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்த போட்டியின் போது இந்திய அணியின் தோனி மூன்று விக்கெட்டுகளை கைபற்றினார். அதில் ஒரு ரன் அவுட் மற்றும் இரண்டு கேட்ச்களும் அடங்கும். இங்கிலாந்து அணியின் இயான் மோர்கன் மற்றும் பேன் ஸ்டோக்ஸ் ஆகியோரின் கேட்ச்களை பிடித்து ஒரு நாள் போட்டியில் தனது 300வது கேட்ச்சை நிறைவு செய்தார்.
dhoni
இதுவரை 320 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 300 கேட்ச்களை பிடித்து சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்த கீப்பர்கள் பட்டியலில் சர்வதேச அளவில் 4 ஆம் இடத்தை பிடித்துள்ளார் தோனி. இந்த பட்டியலில் முதல் இடத்தில் 287 போட்டிகளில் 417 கேட்ச்களை பிடித்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கீப்பர் ஆடம் கில்க்ரிஸ்ட் இருக்கிறார்.

Advertisement