ராணுவ வீரராக மாறிய தோணி …ராணுவ நடையில் அவர்களை மிஞ்சும் தோணி …வைரலாகும் வீடியோ

Dhoni1
- Advertisement -

நேற்றைய தினம் வரலாற்றில் மறக்கமுடியாத தினங்களில் ஒன்று. ஏப்ரல் 2, 2011ம் ஆண்டில் தான் 28 ஆண்டுகளுக்கு பிறகு தோனி தலைமையிலான இந்திய அணி மீண்டும் உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தியது.அதே ஏப்ரல் 2ம் தேதியான நேற்று தான் தோனிக்கும் அவரது ரசிகர்களுக்கும் வரலாற்றில் மற்றொரு மறக்கமுடியாத நிகழ்வாக அமைந்துள்ளது.
dhonis

ஆம், நாட்டின் மிக உயரிய விருதான பத்மவிபூஷன் விருதை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் கையால் பெற்றுக்கொண்டார்.நேற்று தோனி பத்மவிபூஷன் விருதை பெற்றுக்கொள்ள ராணுவ உடையில் வந்திருந்து ஒரு ராணுவ வீரரை போலவே மாறியிருந்தார்.

- Advertisement -

தோனியின் சாதனைகளை பாராட்டி ஏற்கனவே இந்திய அரசு பல்வேறு விருதுகளையும், சிறப்பு பதவிகளையும் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.அதில் ஒன்று தான் தோனிக்கு இந்திய அரசு வழங்கிய ராணுவ லெப்டினெண்ட் கர்னல்.

நேற்று விருது வாங்கிடும் போது ராணுவ உடையில் வந்தது மட்டுமில்லாமல், விருதுக்கான தனது பெயரை அறிவித்தவுடன் ராணுவ வீரர்கள் விருதுவாங்கிடும் போது நடக்கும் நடையை போல நடந்துசென்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு சல்யூட் அடித்தது அனைவரையும் ரசித்திட வைத்தது.தோனி நேற்று இந்த விருதை வாங்கிடும் போது உடன் அவருடைய மனைவி சாக்சியும் வந்திருந்தார்.

தோனி நேற்று நடந்த ராணுவ உடை அணிந்து நடந்த நடை வீடியோவாக பதிவுசெய்யப்பட்டு சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.தற்போது அந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Advertisement