அருவியில் குளியல் போடும் தல தோனி..! வைரலாகும் வீடியோ.!

dhoni vedio
- Advertisement -

கேப்டன் கூல் என்று அனைவராலும் அழைக்கப்படும் மஹேந்திர சிங் தோனி இந்திய அணியின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் இவரது வயது முதுமையின் காரணமாக இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார். நடந்து முடிந்த இங்கிலாந்து தொடரின் டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் கலந்து கொண்ட டோனி தற்போது இந்தியா திரும்பி விட்டார்.

- Advertisement -

அடுத்த ஒரு மாதகாலம் இந்திய அணி இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது எனவே தற்போது ஓய்வில் இருக்கும் தோனி அருவி ஒன்றில் ஜாலியாக குளிக்கும் வீடியோ வெளியாகி இணையதளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. அருவியில் தோனி குளித்து கொண்டிருக்க அவருடன் வந்த நபர் அவர் குளிப்பதை வீடியோ பதிவாக எடுத்துள்ளார்

கடந்த சில நாட்களுக்கு முன் திருநெல்வேலி வந்த தல தோனி டி.என்.பி.எல் போட்டியை டாஸ் போட்டு தொடங்கி வைத்தார். பின்னர் அருகில் இருக்கும் ஒரு அருவிக்கு சென்று குளியல் போட்டது நாம் அறிந்ததே. இந்நிலையில் தற்போது இந்த வீடியோ வெளியாகி உள்ளதால் அங்கு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி கூட எழுகிறது.

Advertisement