இன்னும் தோனிதானா..? BCCI-க்கு தெரியாதா..! அப்போ கோலி இல்லையா ..!

- Advertisement -

கோலி தான் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு விடயம் தான். ஆனால் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமையாக கருதப்படும் பிசிசிஐ இன்னும் தோனி தான் கேப்டனாக இருக்கிறார் போல. அதனால் தான் பிசிசிஐ அதிகாரபூர்வ வலைத்தளத்தில் தோனியின் தனிப்பட்ட விவரத்தில் கேப்டன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த விடயம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.

dhoni

- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி இந்திய அணியின் ஒரு மிக சிறந்த கேப்டனாக இருந்து வந்தார். இந்திய அணிக்கு மூன்று தரப்பு கிரிக்கெட் கோப்பைகளையும் பெற்று தந்த தோனி கடந்த 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றார்.

அதன் பின்னர் டி20 மற்றும் ஒரு நாள் போட்டியின் கேப்டனாக இருந்து வந்தார். பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தனது கேப்டன் பதவியில் இருந்து விலகினார். தோனிக்கு பின்னர் கேப்டன் பொறுப்பை இந்திய அணியின் இளம் வீரராக இருந்த கோலிக்கு கைமாறியது.தற்போதைய இந்திய அணியின் கேப்டனாக இருந்து வரும் கோலியும் சிறப்பாக வழி நடத்தி வருகிறார்.

chandra

dhoni
dhoni

dhoni

இதுவரை 35 டெஸ்ட் போட்டிகளை தலைமையேற்று விளையாடியுள்ள கோலி 21 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பெற்றுள்ளார். அதே போல 52 ஒரு நாள் போட்டிகளில் கோலி கேப்டனாக இருந்துள்ளார்.

dhoni

அதில் 39 போட்டிகளில் வெற்றியும் 12 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளார்.கோலி இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்று இத்தனை போட்டிகள் விளையாடி விட்டார். ஆனால், இன்னமும் பிசிசிஐ வலைத்தளத்தில் தோனி தான் கேப்டன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement