பெளலிங் லைன்-அப்பில் மாற்றம்..! டேவிட் வில்லி பதில் யார் தெரியுமா..? தோனி பிளான் ?

david-villey
- Advertisement -

பேட்ஸ்மேன்களையே பேராயுதமாகக் கொண்ட இரண்டு அணிகள் இன்று மோத இருக்கின்றன. டெல்லி, சென்னை என இரண்டு அணிகளுக்குமே இது வாழ்வா, சாவா மேட்ச் அல்ல. சென்னை ப்ளே ஆஃப்க்கு தகுதிபெற்றுவிட்டது. டெல்லி முதல் ஆளாக ப்ளே ஆஃப்க்குள் நுழையும் வாய்ப்பை இழந்துவிட்டது. ஆனால், இன்றைய மேட்ச்சில் டெல்லியைக் குறைவான ரன்களுக்குள் சுருட்டினால், பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால், ஐதராபாத்தை பின்னுக்குத்தள்ளி டேபிள் டாப்பராக முதல் இடத்தைப் பிடிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்.

தெறிக்கவிடும் டெல்லி பேட்ஸ்மேன்கள்!

- Advertisement -

ஐபிஎல்-ன் முதல் சுற்றில் புனேவில் நடந்த மேட்ச்சில் டெல்லியை தோற்கடித்திருக்கிறது சென்னை. ஆனால், அந்த வெற்றியைப் பெறுவதற்குள் தலையால் தண்ணீர் குடித்துவிட்டது சென்னை. சூப்பர் கிங்ஸின் பெளலர்களை பன்ட் அடித்த அடி மறக்கமுடியாதது. பன்ட் மட்டுமல்ல எந்த மேட்ச்சிலுமே அதிரடி ஆட்டம் ஆடாத தமிழகத்தின் விஜய் ஷங்கர்கூட, அன்று சென்னை பெளலர்களை வெளுத்தார். 5 சிக்ஸர் எல்லாம் அடித்து தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்திக்கொண்டார் விஜய் ஷங்கர். சென்னை அன்று 211 ரன்கள் அடிக்க, 198 ரன்கள் வரை அடித்து சென்னையை அச்சுறுத்தியது டெல்லி. இப்போது மீண்டும் பன்ட், ப்ரித்வி, ஷ்ரேயாஸ் என்பவர்களோடு சென்னையை மிரட்ட பொடியன் அபிஷேக் ஷர்மாவும் இணைந்திருக்கிறான். 17 வயதேயான டெல்லி கில்லி அபிஷேக், பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் 19 பந்துகளில் 46 ரன்கள் அடித்து மிரட்டினான். இன்றைய மேட்ச்சிலும் ப்ரித்வி ஷா, அபிஷேக் ஷர்மா, லாமிசேன் என்கிற இந்த மூன்று அண்டர் 19 ப்ளேயர்கள் அணிக்குள் இருப்பார்கள்.

சென்னையின் பெளலிங்!

- Advertisement -

2018 ஐபிஎல்-ன் டாப் பெளலர்கள் லிஸ்ட்டில் 18-வது இடத்துக்கு மேல்தான் சென்னையின் பெளலர்கள் இருக்கிறார்கள். ஷர்துல் தாக்கூர்தான் சென்னையின் அதிகபட்ச விக்கெட் டேக்கர். இதுவரை 9 மேட்ச்களில் விளையாடி 11 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார்.

இன்றைய மேட்சில் சென்னையின் பெளலிங் லைன்-அப்பில் நிச்சயம் மாற்றம் இருக்கும். தீபக் சாஹர் அணியில் இருப்பார். ஆனால், ஷர்துல் தாக்கூருக்குப் பதில் லுங்கி எங்கிடி அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கலாம். லுங்கி எங்கிடி அணிக்குள் வருவதால் மற்றொரு வெளிநாட்டு பெளலரான டேவிட் வில்லி அணிக்குள் இடம்பெறுவது சிரமம். டேவிட் வில்லி ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் 2 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்தார். அதனால் வில்லியை இன்று தோனி அணிக்குள் எடுக்கமாட்டார் என்றே தெரிகிறது.

- Advertisement -

இந்த ஐபிஎல்-ல் மிகச்சிறந்த பெளலிங் அட்டாக்கை கொண்ட ஐதராபாத் பெளலர்களையே வெளுத்தவர் ரிஷப் பன்ட். புவனேஷ்குமார் ஓவர்களை எல்லாம் அசால்ட்டாக அடித்தார். பிராவோவின் பெளலிங் ஃபார்ம்தான் சென்னைக்கு பெரும்கவலை. டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டான பிராவோ, டெத் ஓவர்களில் அதிக ரன்களைக் கொடுக்கும் மோசமான பெளலர்களில் ஒருவராக மாறியிருக்கிறார். புவனேஷ்குமாரையே அடித்தவர் பன்ட் என்பதால் இன்று பன்ட்டை சமாளிக்க ஸ்பின்னர்களையும், வேகப்பந்து வீச்சாளர்களையும் மாற்றி மாற்றி இறக்குவார் தோனி.

ஸ்பின்னர்களைப் பொறுத்தவரை, ரவீந்திர ஜடேஜா ஃபுல் ஃபார்முக்கு வந்திருப்பதால் அவருடன் ஹர்பஜன், கான் ஷர்மா என இரண்டு பெளலர்களையும் தோனி பயன்படுத்துவார். லுங்கி எங்கிடி, தீபக் சாஹர், ஷேன் வாட்ஸன், ஹர்பஜன், கான் ஷர்மா, டிவெய்ன் பிராவோ என்பதுதான் சென்னையின் பெளலிங் லைன் அப் ஆக இருக்கும்.

- Advertisement -

டெல்லியின் பெளலிங்!

டிரென்ட் பெளல்ட் மட்டும்தான் டெல்லிக்கு நம்பிக்கை தரக்கூடிய ஒரே பெளலர். ஆனால், கடைசியாக நடந்த மேட்சில் நேபாளத்தின் இளம்வீரர் சந்தீப் லாமிசேனை அணிக்குள் கொண்டுவந்தது டெல்லி. கோலி, டிவில்லியர்ஸ் என உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு எதிராக மிகச்சிறப்பாகவே பந்துவீசினார் லாமிசேன். பார்த்திவ் பட்டேலின் விக்கெட்டையும் எடுத்ததோடு 4 ஓவர்களில் வெறும் 25 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அதனால் இன்று அவர் களமிறங்க வாய்ப்புள்ளது. அமித் மிஸ்ராவும், லாமிசேனும்தான் முக்கிய ஸ்பின்னர்களாக இருப்பார்கள். அதேபோல் வேகப்பந்து வீச்சாளர்களில் அவேஷ் கான் இன்றைய டெல்லி அணியில் இடம்பிடிக்க வாய்ப்பிருக்கிறது.

டெல்லி பிட்ச் எப்படி?!

டெல்லி ஃபெரோஷா கோட்லா பிட்ச் பேட்டிங்குக்கு சாதகமான பிட்ச். இதுவரை இந்த சீசனில் 5 போட்டிகள் டெல்லியில் நடைபெற்றுள்ளன. இதில் முதலில் ஆடிய அணிகள்தான் மூன்றுமுறை வெற்றிபெற்றிருக்கின்றன. கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அதிகபட்சமாக இந்த மைதானத்தில் 219 ரன்கள் அடித்திருக்கிறது டெல்லி. ஆனால், கடைசியாக இங்கு நடந்த இரண்டு போட்டிகளிலும் சேஸ் செய்த ஐதராபாத், பெங்களூரு அணிகள் வெற்றிபெற்றிருக்கின்றன.

சென்னையின் பேட்டிங்கைப் பொறுத்தவரை வாட்ஸன், ராயுடு, ரெய்னா, தோனி, பில்லிங்ஸ், ஜடேஜா, பிராவோ என்பதுதான் லைன் அப்- ஆக இருக்கும். டெல்லி மைதானத்தில் யார் முதலில் ஆடினாலும் ஸ்கோர் 180 ரன்களுக்கு மேல் எதிர்பார்க்கலாம். இன்றைய போட்டி பேட்ஸ்மேன்களுக்கு இடையே நடக்கப்போகும் யுத்தம் என்பதால் விசில் போடத் தயாராவோம்!

Advertisement