ஒரு நாளாவது தோனிக்கு செருப்பாக இருக்கனும்..! தோனியை பெருமைப்படுத்திய இங்கிலாந்து வீரர்..! – காரணம் இதுதான்..?

dhoni
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனியின் பெருமையை குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் வீர்ரகர்களும், இந்திய ரசிகர்களும் கூறுவது இயல்பான ஒரு விடயம் தான். ஆனால், ஒரு நாளாவது தோனியின் காலனியாக இருக்க வேண்டும் என்று இங்கிலாந்து ஆல்ரவுண்டர் டேவிட் வில்லே தெரிவித்துள்ளார்.
dhoni
இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த தோனி சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக இருந்தார். இரண்டு ஆண்டு தடைக்கு பின்னர் களமிரங்கிய சென்னை அணி மூன்றாவது முறையாக ஐபிஎல் தொடரை கைப்பற்றியது. சென்னை அணி ஐபிஎல் தொடரை கைப்பற்றியதற்கு அனைவரும் தோனியின் தலைமைதான் காரணம் என்று புகழ்ந்து வந்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய வந்த பிராவோ, வாட்ஸன், டுப்ளிஸி ஆகிய அனைவரும் தோனி தலைமையிலான அணியில் விளையாடியது பெருமை அளித்ததாக கூறியிருந்தனர். இந்நிலையில் சென்னை அணியில் விளையாடியா டேவிட் வில்லே தோனியை ஒரு படி மேலே புகழ்ந்து’நான் தோனியின் காலனியாக தான் இருக்க விரும்புவதாக’ கூறி வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் விளையாடிய டேவிட் வில்லே 3 போட்டிகள் மட்டுமே விளையாடி 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் ஹர்பஜன் சிங் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற டேவிட் வில்லேவிடம் , ஹர்பஜன் சிங் ‘தூங்கி எழும்போது வேறு நபராக விழிக்க விரும்பினால், நீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்கள்” என்று கேள்வி கேட்டார்.
david-villey
இதற்கு பதில் கூறிய டேவிட் வில்லே சற்றும் யோசிக்காமல் “நான் தோனியின் காலனியாக ஒரு நாள் இருக்க வேண்டும். நான் சென்னை அணியில் விளையாடிய போது , தோனியின் போட்டி குறித்த சிந்தனையை கண்டு நான் மிகவும் வியப்பைடைந்தேன் . அவரிடம் இருந்து நிறைய விடயங்களை கற்றுக் கொண்டேன். தோனி பேட்டிங் ஆடுவதை பார்த்தே நிறைய கற்றுக்கொள்ளலாம்” என்று தோனிக்கு புகழாரம் சூடியுள்ளார்.

Advertisement