தவறை ஒப்புக்கொண்ட மனிதனை எட்டி உதைத்துக் கொண்டேயிருப்பது நியாயமா..? டேரன் சமி கடும் விளாசல்..! – காரணம் இதுதான்..?

saamy
- Advertisement -

சில மாதங்களுக்கு தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் சிலர் பந்தை சேதபடுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் விவகாரத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் நியூயார்க் பப் ஒன்றில் ஸ்மித் மது அருந்தியதாக வெளிவந்த புகைப்படம் புதிய சர்ச்சையாக கிளம்பியுள்ளது.
darren
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் துணை கேப்டின் டேவிட் வார்ணர் மற்றும் இளம் வீரர் கேமரூன் பான்க்ராஃப்ட் ஆகியோருக்கு கிரிக்கெட்டில் ஓராண்டு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த தடையில் இருக்கும் ஸ்மித் மற்றும் வார்னர் கனடா நாட்டில் நடக்கும் நடக்கும் குளோபல் டி20 லீக் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறார்.

கனடா கிரிக்கெட் சங்கம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் இணைந்து குளோபல் டி20 லீக் கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. இதில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மீத் விளையாடி வரும் டொராண்டோ நேஷனல்ஸ் அணியில் தான் மேற்கிந்திய அணி வீரரான டேரன் சமியும் விளையாடி வருகிறார். இந்நிலையில் ஸ்மித்தின் மது அருந்திய புகைப்படத்தை பதிவிட்டு “இழிவடைந்த ஸ்மித்தின் நியூயார்க் துயரகரக் காட்சி” என்று பத்திரிகையில் செய்திகள் வெளியானது.
warnersmith
இந்த செய்தி குறித்து மேற்கிந்திய அணி வீரரான டேரன் சமி சமீபத்தில் கருத்து தெரிவிக்கையில்”கீழே விழுந்த மனிதனை உதைத்துக் கொண்டேயிருந்தால் என்ன அர்த்தம்? இது தவறு. அவர்கள் தவறிழைத்தனர், நீக்கப்பட்டனர். அதற்காக அவர்கள் மன்னிப்பும் கேட்டு விட்டனர். விளையாட்டு வீரர்கள் சூழ்நிலையில் தவறிழைப்பது சகஜம் தான். அதற்காக அவர்களை உதைத்துக் கொண்டேயிருப்பது மனிதாபிமானமற்ற செயல்” என்று பத்திரிகையாளர்களை விலாசியுள்ளார்.

- Advertisement -
Advertisement