திமிரு பிடித்த பும்ரா. பும்ராவினை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் – காரணம் இதுதான்

Bumrah 1
- Advertisement -

இந்த ஆண்டு 12ஆவது ஐபில் போட்டித்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் மும்பை அணி வீரரான பும்ரா செய்த செயல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் நெட்டிசன்கள் அவர்மீது தங்களது கோவத்தினை காண்பிக்க ஆரம்பித்துள்ளனர். மேலும் அவரை கழுவி ஊற்றி கண்டன விமர்சனங்களையும் செய்து வருகின்றனர்.

Bumrah

- Advertisement -

மும்பை அணி வீரரான பும்ரா பயிற்சியில் ஈடுபடுவதற்காக மும்பை வான்கடே மைதானத்திற்கு கார் மூலம் வந்தார். அப்போது அங்கிருந்த வரவேற்பாளர் அவரை வரவேற்கும் பொருட்டு பும்ராவை நோக்கி வாழ்த்துக்களை தெரிவிக்க கைநீட்டினார். தன்னை விட வயதில் பெரியவர் என்றும் பாராமல் கூட அவரை பும்ரா அவமதிக்கும் விதமாக நடந்துகொண்டார்.

வரவேற்க வந்தவரை கண்டுகொள்ளாமல் அதனை சற்றும் பொருட்படுத்தாமல் அவருக்கு கைகொடுக்காமல் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டார். இந்த விடயம் இணையத்தில் தீயாய் பரவ நமது நெட்டிசன்கள் 25 வயதிலேயே இவருக்கு இவ்வளவு திமிரா. பெரிய பெரிய ஜாம்பவான் ஆட்டக்காரர்களை பார்த்த இந்த இந்திய அணியில் தற்போது புதிதாக ஆடும் வீரர்கள் கூட பெரிய சாதனையாளர்கள் என்று நினைத்து வருகின்றனர் என்று தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Bumrah

இந்திய அணி வீரர்களான ராகுல் மற்றும் பாண்டியா ஆகியோர் ஏற்கனவே பெண்கள் குறித்தா சர்ச்சையான கருத்துக்களால் சில போட்டிகளில் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே, இன்றைய இளம் கிரிக்கெட் வீரர்கள் முதலில் ஒழுக்கத்தினையும், மற்றவரை மதிக்கும் பழக்கத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement