இலங்கை அணியின் ஓய்வறையை உடைத்தது இதனால்தான் ! காரணத்தை கூறிய பங்களாதேஷ் வீரர்கள்

broken
- Advertisement -

இலங்கை – வங்கதேச அணிகளிடையேயான கடைசி லீக் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் உள்ள பிரேமதாஸா மைதானத்தில் நடைபெற்றது.இதில் ஒரு பந்து மீதமிருக்கையில் 19.5 ஓவர்களில் வெற்றி இலக்கான 160 ரன்களை எடுத்து 2விக்கெட் வித்தியாசத்தில் த்ரில்லாக இலங்கையை வென்று வங்கதேச அணி நிடாஸ்கோப்பையின் இறுதி போட்டிக்கு தகுதிபெற்றது.

perara

நேற்றைய இந்த போட்டியின் போது மோதலுக்கும்,கிண்டலுக்கும்,டான்ஸ்க்கும் பஞ்சமே இல்லை எனலாம். நேற்றைய போட்டி இறுதிகட்டத்தின் போது தெருச்சண்டையை போலவே மாறிவிட்டது.19வது ஓவரை உதனா வீச முதல் இரண்டு பந்துகளும் முஷ்பிகூர் ரஹ்மானின் தலைக்கு மேலே எழும்ப இரண்டாவது பந்திற்கு லெக் அம்பயர் நோபால் சிக்னல் காண்பிக்க அதை கவனிக்காத நடுவர் நோ பால் தரமறுத்துவிட்டார்.

- Advertisement -

இந்நிலையில் வங்கதேச வீரர்களுக்கு தண்ணீர் அளிக்க சென்ற மாற்றுவீரர் இலங்கை கேப்டனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட மோதல் அதிகமாகி ஒருவரை ஒருவர் தள்ளிக்கொள்ள வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் ஹல் அசேன் உடைமாற்றிடும் அறையிலிருந்து வெளியே வந்து மைதானத்தில் நின்று வீரர்களை விளையாடாமல் களத்திலிருந்து வெளியே வரச்சொல்லி ஒரு புறம் கத்திக்கொண்டிருந்த அதேவேளையில் மற்றொருபுறம் கோபத்தின் உச்சத்தில் வங்கதேச அணியினரால் உடைமாற்றிடும் அறை கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

bangal

வெற்றிபெற்ற பின்னர் இதுகுறித்து முகமது இக்பால் கூறும்போது “இறுதி ஓவரின் போது எழுந்த நோபாலுக்கு அப்பீல் செய்தோம். லெக் அம்பயர் நோபால் சிக்னல் காண்பித்தும் மற்றொரு அம்பயர் நோபால் தராததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டோம்.நடந்தது இதுதான். அதற்குள் இரு அணிவீரர்களுக்கும் மோதல் ஏற்பட்டுவிட்டது. வெற்றி பெற்றதும் எங்களின் கோபம் மறைந்து விட்டது என்றார்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்த வங்கதேச கேப்டன் “மிகவும் பரபரப்பாக சென்ற ஆட்டத்தில் சிறிது தடுமாற்றம் ஏற்பட்டுவிட்டது. இது ஆரோக்கியமான போட்டி தான். இலங்கையும் நாங்களும் நல்ல நண்பர்கள். இன்று சற்று உணர்ச்சிவசப்பட்டு விட்டோம். இனிமேல் இதுபோன்று நடக்காமல் பார்த்துக்கொள்வேன். அணி வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சி என்றார்.

srilanka1

Advertisement