10 வீரர்களுடன் விளையாடப்போகும் இங்கிலாந்து அணி.! ஒரு வீரருக்கு எலும்பு முறிவு.!

injuery
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 18 ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 161 ரன்களுக்கு சுருண்டது. அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இந்த போட்டியின் 3 ஆம் நாளான நேற்றைய போட்டியின் 44-வது ஓவரின் போது, வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் வீசிய பந்தை இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ பிடிக்க முயன்றபோது பந்து அவரது இடதுகை நடுவிரலை பயங்கரமாகத் தாக்கியது. இதனால் வலியால் தரையில் விழுந்து துடித்த அவரை உடனடியாக வெளியே கொண்டு சென்றனர்.

- Advertisement -

bairstow

பின்னர் அவருக்கு பதிலாக ஜோஸ் பட்லர் தற்காலிகமாக விக்கெட் கீப்பிங்கை கவனித்தார். மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட பேர்ஸ்டோவுக்கு ஸ்கேன் எடுத்து பார்த்ததில் அவரது விரலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவர் தொடர்ந்து ஆடுவது சந்தேகம் எனத் தெரிய வந்துள்ளது.
மேலும், இந்தத் தொடரிலிருந்து வெளியேறவும் வாய்ப்புள்ளது.

johnny

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாரிஸ்டோவ் 93 ரன்களை எடுத்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இந்நிலையில் இன்று துவங்கவுள்ள 4 ஆம் நாள் ஆட்டத்தில் 498 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற கணக்கில் இன்னும் சிறிது நேரத்தில் களமிறங்கவுள்ளது இங்கிலாந்து அணி. இந்த போட்டியில் அவர் களமிறங்குவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement