இந்திய இங்கிலாந்து ஆட்டத்தின் போது மைதானத்தில் சச்சின் மகன் செய்த செயல்.! பாராட்டிய மைதான நிர்வாகம்!

- Advertisement -

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டபோதிலும் இதில் சுவாரசியமான நிகழ்வு ஒன்று அரங்கேறியுள்ளது.பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மைதான பராமரிப்பாளர்களுடன் சேர்ந்து ஆடுகளத்தை மூட உதவி புரிந்தார்.

Arjun-Twitter

இந்திய 19வயதுக்கு உட்பட்ட தேசிய அணியில் விளையாடி வருகிறார்.இவர் ஒரு ஆல்ரவுண்டர் என்பது குறிப்பிடத்தக்கது தந்தையை போல சிறந்த பேட்ஸ்மானாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவர் தான் சிறந்த ஆல்ரவுண்டராக வர வேண்டும் என்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.இலங்கையில் நடந்த தொடரின் போது இவரது ஆட்டத்திறன் சற்று தொய்வடைந்தது

- Advertisement -

எனவே இங்கிலாந்தில் உள்ள எம்சிசி அகாடமியில் சிறப்பு பயிற்சி பெற்று வருகிறார் இந்நிலையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி நடந்த இந்திய இங்கிலாந்து அணிகெதிரான போட்டியில் மழையினிடையே அவர் மைதான பராமரிப்பாளர்களுடன் வந்து மைதானத்தை மூட உதவி புரிந்தார் இவர் செய்த இந்த செயல் கிரிக்கெட் வீரர்கள் மற்றும்  கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

arjun ten

இவரின் இந்த செயலை பாராட்டும் விதமாக லண்டன் மைதான நிர்வாக அதிகாரிகள் ட்விட்டரில் அவரை வாழ்த்தியுள்ளனர். இங்கு எம்சிசி அகாடமியில் பயிற்சி பெற்று வரும் அர்ஜுன் டெண்டுல்கர் மழையின் போது ஆடுகள பராமரிப்பாளர்களுடன் சேர்ந்து மைதானத்தை மூட உதவி புரிந்ததற்கு வாழ்த்துக்கள் என்று அந்த ட்விட்டர் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.இவரின் இந்த செயல் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பாராட்டுகளை  பெற்றுள்ளது.

Advertisement