இன்றுவரை கிரிக்கெட்டில் மிகவும் கேவலமான சாதனை படைத்த 5 வீரர்கள்.! என்ன சாதனை தெரியுமா..?

- Advertisement -

கிரிக்கெட் உலகில் பந்து வீச்சாளர்களை விட பேட்ஸ்மேன்கள் தான் ரசிகர்களின் அதிக கவனத்தை பெறுகின்றனர். கிரிக்கெட் தொடங்கப்பட்ட ஆரம்ப காலத்தில் 4 மற்றும் 6 என்பதெல்லாம் அவ்வளவு சாதாரணமாக விடயமாக இருந்தது இல்லை. போட்டியில் நிலைத்து ரன் அடிப்பது தான் சிறந்த ஆட்டம் என்று கருதப்பட்டது. அந்த வரிசையில் தனது கிரிக்கெட் வரலாற்றால் சிக்ஸ் அடிக்காத சில அனுபவமிக்க சர்வதேச பேட்ஸ்மேன்களும் இருக்கின்றனர்.

nosix

- Advertisement -

1. கல்லும் பேர்க்சன் :- ஆஸ்திரேலிய அணியின் வலது கை பேட்ஸ்மேனான இவர், 2009 ஆம் ஆண்டு தனது முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கினார். இதுவரை 30 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 663 ரன்களை அடித்த இவர், இதுவரை ஒரு சிக்ஸ் கூட அடித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2. மனோஜ் பிரபாகர்:- 1963 ஆம் ஆண்டு பிறந்த இவர், இந்திய அணியில் கவாஸ்கர் தலைமையில் விளையாடிய ஒரு சிறந்த ஆல்ரவுண்டர்.1984-1996 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்திய அணியில் விளையாடி வந்த பிரபாகர்,30 டெஸ்ட் மற்றும் 130 ஒருநாள் தொடர்களில் விளையாடி,3458 ரன்களை குவித்துள்ளார். ஆனால், ஒரு சிக்ஸ் கூட இவரால் குவிக்க முடியவில்லை.

nosix

3. ஜெப்ரி போய்கொட்:- 1960-80 காலகட்டத்தில் இங்கிலாந்து அணியில் விளையாடிவந்த ஒரு சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன். 108 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8114 ரன்களை குவித்துள்ளார். மேலும் , 36 ஒரு நாள் தொடரில் விளையாடி 1082 ரன்களையும் குவித்துள்ளார்.ஆனால், சிக்சர்கள் ஒன்று கூட இல்லை.

- Advertisement -

4. திலன் சமரவீர : – 1976 ஆம் ஆண்டு பிறந்த இவர், (1998–2013) ஆம் ஆண்டு காலகட்டத்தில் இலங்கை அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்து வந்தார். தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 81 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 53 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய இவர், 16 சதங்கள் மற்றும் 30 அரை சதத்தையும் அடித்துள்ளார். ஆனால், ஒரு போட்டியிலும் சிக்ஸ் அடித்தது இல்லை.

noosix

5. டியான் இப்ராஹிம் :- ஜிம்பாபே அணியில் தனது 21 வயதில் அறிமுகமானார். தொடர்ந்து 4 ஆண்டுகள் ஜிம்பாபே அணியில் விளையாடிய இவர், 29 டெஸ்ட் மற்றும் 82 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதுவரை 1443 ஒரு நாள் ரன்களையும் 1225 டெஸ்ட் ரன்களையும் பெற்றுள்ள இவர் ஒரு சிக்ஸ் கூட தனது பெயரில் அடித்தது இல்லை.

Advertisement