அடுத்த ஆண்டு ஐபிஎல்-லில் தங்கள் உரிமையாளர்களால் கைவிடப்படும் 3 அதிரடி வீரர்கள்..!

pollard
- Advertisement -

இந்தியாவில் நடந்து வரும் ஐ.பி.எல் போட்டிகள் தான் மக்கள் மத்தியில் பிரபலமான டி20 தொடராக கருதப்படுகிறது. மேலும். இந்த ஐபிஎல் தொடரில் ஒரு சில வெளிநாட்டு வீரர்கள் சிறப்பாக விளையாடி வந்தாலும் ஒரு சில வீரர்களுக்கு அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரகளில் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம் தான். அந்த வரிசையில் கீரோன் பொல்லார்ட், டேவிட் மில்லர், கிளென் மாக்சுவெல் போன்ற 3 வீரர்களை குறிப்பிட்டு கூறலாம்.Pollard (1)

கீரோன் பொல்லார்ட் :
தற்போது மும்பை அணியில் ஆடிவரும் இவர் ஒரு மிக சிறந்த ஆள் ரவுண்டு பிளேயர், ஆனால், இந்த ஐ.பி.எல் தொடரில் இவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டவில்லை. மும்பை அணியில் பேட்ஸ்மேனாக மட்டும் பயன்படுத்தப்பட்டு வரும் பொல்லார்ட் இந்த தொடரில் அந்த அணிக்காக எதிர்பார்த்த ரன்களை குவிக்கவில்லை.

- Advertisement -

டேவிட் மில்லர்: ஆஸ்திரேலிய அதிரடி ஆட்டக்காரரான இவர் அந்த அணி விளையாடிய பல போட்டிகளை அற்புதமாக விளையாடியுள்ளார். ஐ.பி.எல் தொடரில் தான் பங்கேற்ற காலத்தில் இருந்து பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் இவர், இந்த ஐ.பி.எல் தொடரிலும் பஞ்சாப் அணியில் தான் விளையாடிவருகிறார். ஆனால் மற்ற சீசன்களை போல இந்த சீசனில் இவர் ஜொலிக்கவில்லை. இவரது பலமே பேட்டிங் தான் ஆனால், அந்த பலத்தை இழந்து இந்த தொடரில் மிகவும் சோர்வுடன் ஆடிவருகிறார்.

miller

கிளென் மாக்சுவெல் :
அதிரடியாக விளையாடும் வீரர்களில் ஒரு முக்கியமான நபர். எந்த பந்தை போட்டாலும் அந்த பந்தினை மடக்கி அடிக்கும் திறமை கொண்டவர். தற்போது டெல்லி அணியில் விளையாடி வரும் இவர், தற்போது அதிரடி என்ற சொல்லை மறந்து விட்டது போல் விளையாடிவருகிறார்.

maxwell

9 கோடி ருபாய் கொடுத்து ஏலம் எடுக்கப்பட்ட இவர், இதுவரை இந்த ஐ.பி.எல் தொடரில் விளையாடிய 7 போட்டிகளில் இவர் எடுத்த ரன்கள் என்று பார்த்தல் 17, 13, 47, 4, 12, 27, 6 என்று தான் இருக்கிறது. இதனால் இவரது ஐ.பி.எல் பயணம் அடுத்த ஆண்டு தொடருமா என்பது சந்தேகம் தான்.

Advertisement